Also Watch
Read this
கடந்த சில நாட்களாக மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் கொ*ச் சம்பவங்களால் பொது மக்களிடையே பெரும் அச்சமும், காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சோலையழகுபுரம், சிந்தாமணி, கூடல்புதூரில் மதுபோதையிலும், முன்விரோதத்தாலும் 3 இளைஞர்கள் அடுத்தடுத்த நாட்களில் கொ* செய்யப்பட்டுள்ளனர்.

தூங்காநகரில்...
அமைதியை நோக்கி பயணிக்க முயற்சிக்கும் மதுரையில், கடந்த 4 நாட்களில் 3 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொ* செய்யப்பட்டது போலீசாரை கிறுகிறுக்க வைத்து உள்ளது.
மதுரை மாநகர் சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற கிரைம் மணி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசார் இவரது நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்து உள்ளனர். மணியும், அவரது நண்பரான திவாகரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுவிட்டு ஃபுல் போதையில் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருவரையும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுத்து நிறுத்தி பைக்கை சோதனையிட்டு உள்ளனர். போலீசாரை கண்டதும் இருவரும் வாய் உளற ஆரம்பிக்கவே, மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அவர்களது பைக்கையும், செல்போனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாறி மாறி பழி போட்டு...

அடுத்த சம்பவம்
இந்த வழக்கு விசாரணையில் போலீசார் மூழ்கிக் கிடக்க, மதுரை சிந்தாமணி பகுதியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசாரின் காதுகளுக்கு தகவல் எட்டியுள்ளது. கண்ணன் காலனியை சேந்த முருகன் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கொ* வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட படுகொ* செய்துவிட்டு தப்பியோடி உள்ளது. முருகன், என்ன காரணத்திற்காக கொ* செய்யப்பட்டார், எந்த கும்பல் சம்பவத்தில் ஈடுபட்டது என எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தற்போது திணறி வருகின்றனர்.

3ஆவது சம்பவம்
இதேபோல் கூடல்புதூர் செல்லையா நகர் பகுதியை சேர்ந்த ராஜனுக்கும் அவரது நண்பர்களான விக்னேஷ், மகேஷ், ஆனந்துக்கும் மதுபோதையில் பணம் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட, மூவரும் சேந்து ராஜனை அடித்துக் கொ*றுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மூன்று பேர் கொ* செய்யப்பட்டுள்ளதும், குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படாததும் தற்போது மதுரை மக்களின் தூக்கத்தை அடியோடு கெடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved