news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுராந்தகத்தில் மீண்டும் வெற்றி கண்ட மரகதம் குமரவேல்
tv

Also Watch

மதுராந்தகத்தில் மீண்டும் வெற்றி கண்ட மரகதம் குமரவேல்

5 மாத இடைவெளியில், 3ஆவது முறையாக...

49

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகம் தொகுதியில் மீண்டும் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். ஐந்து மாத இடைவெளியில் இருவேறு கட்சிகளின் சார்பில் களம் கண்டவர் வாகை சூடினார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்:
மரகதம் குமரவேல் தவெக – 70,916
பரந்தாமன் திமுக – 51,672
கணிதா சம்பத் அதிமுக – 46,436
நாம் தமிழர் கட்சி - 1,753
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1,389
வெற்றி வித்தியாசம் - 19,244 வாக்குகள்

3ஆவது முறையாக...
மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில், 3ஆவது முறையாக எம்எல்ஏ ஆக தேர்வாகி உள்ளார்.

இடைத்தேர்தல்
மதுராந்தகம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் பரந்தாமனை 19,244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.

3ஆவது இடத்தில் அதிமுக
கடந்த பொதுத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
2026ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1,632 கூடுதல் வாக்குகள்
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று இருந்தார். இடைத்தேர்தலில், தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 70,916 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் பெற்றதைவிட இந்த முறை 1,632 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.

3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு...
கடந்த பொதுத் தேர்தலில் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 வாக்குகள் பெற்று 2ஆவது இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போதைய இடைத்தேர்தலில் திமுக 51,672 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த பொதுத் தேர்தலைவிட 8,166 வாக்குகள் குறைவு. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 62,090 வாக்குகள் பெற்ற தவெக, தற்போது மரகதம் குமரவேலை வேட்பாளராக நிறுத்தி 70,916 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது தவெகவின் முந்தைய வாக்குகளைவிட 8,826 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved