news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஏழு மாவட்டங்களில் மிகக் கனமழை என வானிலை மையம் கணிப்பு
tv

Also Watch

ஏழு மாவட்டங்களில் மிகக் கனமழை என வானிலை மையம் கணிப்பு

ஆரஞ்ச் அலெர்ட் விடுத்தது

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானில மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை...
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

அக்டோபர்-19 இன்று
நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர்-20
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர்-21
தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர்-22
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர்-23
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர்-24,25

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 23 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். இந்த நாட்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தலைநகர் சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்காக...
அக்டோபர் 22, 23ஆம் தேதிகளில் கேரளம், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தமிழக கடலோரம், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Related Link
மதுராந்தகம், தாராபுரத்துக்கு புதிய திட்டங்கள்

மதுராந்தகம், தாராபுரத்துக்கு புதிய திட்டங்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved