news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உதயநிதிக்கு நன்றி சொன்ன அமைச்சர் ஆதவ்
tv

Also Watch

உதயநிதிக்கு நன்றி சொன்ன அமைச்சர் ஆதவ்

தமிழக சட்டப்பேரவையில்...

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என, அமைச்சர் ஆதவ் பேசி உள்ளார்.

தொகுதி சீரமைப்புக்கு எதிராக...
தொகுதி மறுவரையறைக்கு எதிராக, தமிழக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;
அறிஞர் அண்ணாவை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தனர். ஒன்றிய அரசு கொண்டு வர நினைக்கும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு மாநில சுயாட்சியை இழக்கும்.

அரசியலமைப்பை பாதுகாக்கவே...
வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார். மாநிலங்கள் இல்லாமல், ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா வளர முடியாது. ஒன்றிய அரசு அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. அரசியலமைப்பை பாதுகாக்கவே, தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இருந்து பிரதமரை...
அண்ணா அன்றே முழங்கினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. மாநில நலனுக்காக கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். 5,6 வட மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் பிரதமரை உருவாக்கலாம் என்ற நிலை காணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து பிரதமரை உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசின் சட்டங்கள் தமிழகத்திற்கு எதிராக உள்ளது.

கட்சி பாகுபாடின்றி...
எனவே, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும் போது, கட்சி பாகுபாடின்றி தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Related Link
F.C.R.A. மசோதாவுக்கு எதிர்ப்பு, அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றம்

F.C.R.A. மசோதாவுக்கு எதிர்ப்பு, அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றம்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா தலைவருக்கு எதிராக போர்க்கொடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved