news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம், எதிர்த்த வழக்கு வாபஸ்
tv

Also Watch

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம், எதிர்த்த வழக்கு வாபஸ்

அபராதம் விதிக்க வேண்டும்

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. விளம்பரத்துக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்வதைத் தடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

  • சென்னை, பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
  • இதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
  • இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

  • இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் கூறி இருப்பதாவது;

  • பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ளதாக, தவெக தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது.
  • அவ்வாறு இருக்கும்போது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு 1,200 கோடி செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலக கட்டிடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகை செலவாகாது. மக்களின் வரிப் பணமும் சேமிக்கப்படும். அந்த கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது.

புதிய வீடுகள் கட்டலாம்

  • சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்றவற்றுக்கு அருகில் உள்ள தலைமை செயலகம் இடமாற்றம் செய்யப்பட்டால், பொது மக்கள் வந்து செல்வது மிகவும் கடினமாகிவிடும்.
  • பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். ஏற்கெனவே, அங்கிருந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காக, மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது.

தடை விதிக்க வேண்டும்

  • எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட கோரி, செப்டம்பர் 12ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு அளித்த மனு மீது, இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
  • எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடும்படி உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் தீர்வு எட்டும் வரை, தலைமைச் செயலக கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
  • இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

உத்தரவிட முடியாது

  • இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது;
    எந்த இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
  • வழக்குக்கான முக்கிய காரணங்களை கூட மனுவில் தெரிவிக்கவில்லை என்றால் எப்படி நீதிமன்றம் வழக்கை பரிசீலனை செய்ய முடியும். ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட ஒரு வழக்கை அபராதத்துடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடும் அபராதம்... எச்சரிக்கை

  • அரசின் கொள்கை ரீதியான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. புதிய பார்லிமெண்ட் கட்டுவதை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே இதேபோல 2011ல் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
  • அரசின் கொள்கை முடிவில் எப்படி தலையிட முடியும்? இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. அதனால், கடுமையான அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    இவ்வாறு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
  • இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததால், அபராதம் எதுவும் விதிக்காமல், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Link
வெற்றிப்பயணம் திட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்

வெற்றிப்பயணம் திட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்

          



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved