Also Watch
Read this
சென்னை அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுல லஞ்சம் தலை விரிச்சு ஆடுதாம், டாஸ்மாக் பார்கள்லயும், எஃப்.எல்.2 கடைகள்லயும் வசூல் வேட்டை பட்டைய கிளப்புதாம்.

போதையை ஒழிக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்துட்டு வந்தாலும், தலைநகர் சென்னையிலேயே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் தனி ராஜ்யம் நடத்திக்கிட்டு இருக்காம். அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுல அகிலத்தையே தன்பேர்ல வெச்சிருக்கற ஒரு லேடி இன்ஸ்பெக்டர் அந்த இடத்துக்கு வந்து ஒன்பது மாசம்தான் ஆகுதாம்,

ஆனா அவர் ஸ்டேஷனுக்கே மொத்தம் ஒன்பது தடவைதான் வந்திருப்பாராம். ஆனா வசூல்ல மட்டும் கடமை தவறாம இருக்காராம். இவரோட சரகத்துல சுமார் 100 டாஸ்மாக் ஷாப்கள் இருக்காம். அங்க இருக்கற பார்கள்ல இருந்து மாசா மாசம் கணிசமான தொகைய வசூலிக்கறதுக்காகவே ரெண்டு கான்ஸ்டபிள்கள பிரத்யேகமா ஒதுக்கி இருக்காராம்.

புது ஆட்சி பதவியேற்றவுடன் டாஸ்மாக்லயோ, டாஸ்மாக் பார்லயோ ஒரு பைசா கூட போலீஸுக்கு மாமுல் தர்றதில்லையாம். ஆனா, அண்ணா நகர் மதுவிலக்கு போலீஸ் மட்டும் அவங்க சரகத்துல இருக்கற பார்கள்ல திடீர் ரெய்டு செஞ்சு விதவிதமா மிரட்டி வசூல்ல சாதனை படைக்குதாம்.

டாஸ்மாக் பார் மட்டுமில்லாம அண்ணா நகர் சரகத்துல இருக்கற பத்து எஃப்.எல்.2 கடைகள்லயும் வசூல் வேட்டை களை கட்டுதாம். அந்த லேடி இன்ஸ்பெக்டரோட இந்த துணிச்சலுக்கு காரணமே அவருக்கு மேல இருக்கற கண்ட்ரோல் ரூம் புகழ் முருகன் பேர் கொண்ட ஒரு உயர் அதிகாரி கொடுக்கற இடம் தானாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved