news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இன்ஸ்டாவில் ராதாவுக்கு ஸ்டோரி, பிரஸ்மீட்டில் 'தேம்பி' அழுத அம்பிகா
tv

Also Watch

இன்ஸ்டாவில் ராதாவுக்கு ஸ்டோரி, பிரஸ்மீட்டில் 'தேம்பி' அழுத அம்பிகா

"பணம் காச கண்டுபுட்டா புலிகூட..."

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காசோலைகளை திருடி, 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை அம்பிகா மீது புகார் கூறி, அவரது தங்கை ராதா கமிஷனர் ஆஃபிஸில் கண்ணீர் வடிக்க, போலி ஆவணங்கள் மூலம் ஏ.ஆர்.எஸ். கார்டனை அபகரித்தது, குடும்பத்தின் தங்க நகைகளை சுருட்டியது, தனக்கே தெரியாமல் தன் பெயரில் வங்கி கடன் வாங்கியது என பதிலுக்கு அம்பிகாவும் பிரஸ்மீட் வைத்து பஞ்சாயத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...
ஊட்டி ஊட்டி வளர்த்த உடன்பிறந்த தங்கையே சொத்துக்காக ஒரு நிமிடத்தில் உதறித் தள்ளிவிட்டு திருட்டு பட்டம் கட்டி ஊரறிய போலீசில் புகார் கொடுத்ததை எண்ணி மனம் நொந்துபோய், நடிகை அம்பிகா வைத்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்துள்ளார்.

ரூ.46 கோடி காசோலை...
வீட்டில் வைத்திருந்த செக்குகளை திருடி, 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை அம்பிகா மீது குற்றம் சுமத்தி, சென்னை காவல் ஆணையரகத்தில் அவரது தங்கை ராதா புகாரளித்து பரபரப்பை கூட்டியிருந்தார்.

அதுமட்டுமா, ’என்னை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. பீரோவில் வைத்த நகைகள் என்ன ஆனதோ? போன் செய்தாலும் எடுக்கவில்லை’ என புகார்களை அடுக்கி இருந்தார். இதுதொடர்பான விளக்கம் ஏதும் கொடுக்காமல் அமைதி காத்துவந்த அம்பிகா மீது இணையவாசிகள், வழக்கம் போல் ஒருதலைபட்சமாக அம்பிகாவுக்கு எதிராக சீறி கொக்கரித்தனர்.

மனம் திறந்த அம்பிகா
இந்நிலையில் தான், தனது இன்ஸ்டாகிராம் மூலம் தங்கை ராதாவுக்கு அம்பிகா பதிலடி கொடுத்திருக்கிறார். ’என் வாழ்நாளில் இப்படி ஒரு பிரஸ் மீட்டை ஏற்பாடு செய்வேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை,’ என வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை அழைத்து மனதில் உள்ளவற்றை கொட்டத்தொடங்கினார் அம்பிகா.

என்னோட குழந்தையாக பார்த்த ஏ.ஆர்.எஸ். கார்டன் பெயரை ஆர்.ஆர். கார்டன் என மாத்தியிருந்தத பார்த்த உடனேயே எனக்கு பேனிக் அட்டாக் வந்துருச்சு என நொறுங்கிப்போனார்.

ராதாவுக்கு வீக்னஸ்...
ஏ.ஆர்.எஸ். கார்டன் தொடர்பான சொத்து தகராறில் போலீசார் 10 முறை சம்மன் அனுப்பியும் ராதா தரப்பு விசாரணைக்கு வரவில்லை என்ற அம்பிகா, தனிப்பட்ட முறையிலும் அழைத்த போதும் தன் நம்பரையே பிளாக் செய்துவிட்டார் என குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, அம்மாவின் தங்க நகைகளை மொத்தமாக ராதா அபகரித்து வைத்து உள்ளதாகவும், அதைப்பற்றி கேட்ட போதும் பதிலளிக்கவில்லை எனகுமுறியவர், கோல்டு என்றாலே ராதாவுக்கு வீக்னஸ் என போட்டுடைத்தார்.

காசோலை கையெழுத்து...
’சின்னதாக ஒரு பர்ஸை கூட லாக் செய்து வைக்கும் அளவுக்கு புத்தியுடைய ராதா எப்படி அவ்வளவு முக்கியமான செக்குகளை வீட்டில் வைத்துவிட்டு செல்வார்,’ என அம்பிகா கேள்வி எழுப்பினார். மேலும் வீட்டிற்கே வராத ராதா, எப்படி செக்குகளில் கையெழுத்திட்டு இங்கு வைத்து சென்றிருப்பார் என வினவினார்.

ராதா கொடுத்த காசோலை
சொத்து மற்றும் நகைகள் தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்தே தங்களுக்கு செட்டில்மெண்ட்டுக்காக ராதா செக்கை கொடுத்ததாகவும், ஒவ்வொரு செக்கில் குறிப்பிடப்பட்ட தொகைக்கும் ஒவ்வொரு கணக்கை ராதா எழுதி கொடுத்திருப்பதாகவும் அம்பிகா விளக்கமளித்துள்ளார். எங்கே போலீஸ் விசாரித்தால் ஜெயிலுக்கு போகும் நிலை வருமோ? என பயந்தே ராதா செட்டில்மெண்ட் செய்ததாகவும் கூறினார்.

ராதாவால் வேதனை
’செக் கொடுத்தது ராதா, ஸ்டாப் பேமண்ட் கொடுத்தது ராதா, ஆனால் நஷ்டமும் கஷ்டமும் எனக்கு தான்,’ என கொந்தளித்த அம்பிகா, தன்னைப் பற்றி ராதா கூறிய புகார்கள் மிகுந்த வேதனை அளித்ததாக கூறினார்.

குடும்ப விஷயம் நாலு சுவற்றிற்குள் இருக்க வேண்டும் என எண்ணியே தாங்கள் அமைதி காத்ததாகவும் ஆனால் ராதா இப்படி பொதுவெளியில் பேசியிருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

அம்பிகா vs ராதா
ஏ.ஆர்.எஸ். கார்டனை முறைகேடாக அபகரித்து தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்றிருப்பதாகவும், மொத்தமாக 97 கோடி ரூபாய் வரை தங்களுக்கு ராதா கொடுக்க வேண்டும் எனவும் அம்பிகாவும் அவர் தம்பி மல்லிகார்ஜுனும் தெரிவித்தனர்.

இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கி பஞ்சாயத்தை கூட்டியிருக்கும் நிலையில், போலீசார் விரைந்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

Related Link
செக் திருடி மோசடி செய்த அம்பிகா? போலீஸ் ஸ்டேஷனில் 'ராதா' கண்ணீர்

செக் திருடி மோசடி செய்த அம்பிகா? போலீஸ் ஸ்டேஷனில் 'ராதா' கண்ணீர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாட்டை உலுக்கிய ஷாக் ரிப்போர்ட், தேர்தல் ஆணையத்தில் திடீர் பிளவு?

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved