ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன், காலை முதலே ஏராளமான ரசிகர்கள் வந்து குவியத் தொடங்கிய நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினி, அவர்களை பார்த்து, கையசைத்து வாழ்த்து கூறி, பறக்கும் முத்தங்களை கொடுத்து விட்டு உள்ளே சென்றார்.முத்து படத்தின் காட்சியை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துநடிகர் ரஜினிகாந்த், தனது முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில் ரசிகர்கள் பலரும், பதிலுக்கு அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.