news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு
tv

Also Watch

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

தமிழர்களை மீட்க தீவிரம்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நேபாளத்தின் வடக்கில் பாயும் போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கெடுத்து ஓடிய பெரு வெள்ளம், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலங்கள், சாலைகள், வாகனங்கள், மின்கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 40 கிராமங்கள் பெரும் பாதிப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 40 கிராமங்களில் பெரும் பாதிப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. போதே கோஷி ஆற்றின் குறுக்கே இருந்த 19 பாலங்கள், 11 நீர் மின்நிலையங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெருவெள்ளம் - நேபாளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 57 பேர் யார், யார் என்ற விபரங்கள் வெளியானது. சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தால் 93 பேர் பலி
நேபாளத்தில் ஏற்பட வெள்ளப்பெருக்கில் சிக்கி 93 பேர் உயிரிழந்த தாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்தை போலவே திபேத் நாட்டிலும் பெரு வெள்ளத்தால் சேதமென தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளம், மண் சரிவுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக திபேத் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

காரணம் என்ன?
பெரு வெள்ளத்திற்கு நிலநடுக்கமே காரணம் என நேபாளம் அரசு அறிவித்து உள்ளது. 4 புள்ளி 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நேபாளத்திற்கு உதவ தயார் - பிரதமர் மோடி
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்யுமென பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க விமானங்களை இந்திய அரசு அனுப்புகிறது. ராணுவத்தின் சி 17, சி-130 ரக விமானங்கள் மூலம் நாளை இந்தியர்களை அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், அதிர்ச்சி தகவல்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், அதிர்ச்சி தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved