news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வயலில் கள்ளக்காதலனுடன் உடலுறவு
tv

Also Watch

tv

Read this

வயலில் கள்ளக்காதலனுடன் உடலுறவு

பண்டமீதிப்பள்ளி, தெலங்கானா

Posted on: Mar 25, 2026 10:30 AM

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு கோபத்துடன் வயலுக்கு சென்ற கணவன். வயலில் இருந்த இளைஞரை கண்டதுண்டமாக வெட்டி சாய்த்த கொடூரம். கொலைக்கு பின் காவல் நிலையத்தில் சரணடைந்து அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த கணவன். அடுத்தடுத்து விசாரணையில் வெளியான பகீர் தகவல். இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

தலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த இளைஞர் பாலேஷ்
வழக்கம்போல கிராம மக்கள் சிலர், வயலுக்கு வேலைக்கு போய்ருக்காங்க. அப்ப தலையில ரத்தக் காயங்களோட பாலேஷ்-ங்குற இளைஞர் கொடூரமான முறையில உயிரிழந்து கிடந்துருக்காரு. இந்த தகவல் அந்த கிராமம் ஃபுல்லா காட்டுத் தீ போல பரவிருக்கு. இதகேட்டு சம்பவ இடத்துக்கு ஓடி வந்த பாலேஷோட மனைவியும், குழந்தைகளும் சடலத்த கட்டிப் பிடிச்சு அழுதுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணை பண்ணாங்க. இதுக்கிடையில ஷம்ஷிரெட்டிப்பள்ளி பகுதியில உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ஒருத்தரு, சார் என் பேரு சாயிலு, நான் பாலேஷ்-ங்குற இளைஞர கொலை பண்ணிட்டேன், அதனால இப்ப சரணடைய வந்துருக்கேன்னு சொல்லிருக்காரு. இதகேட்ட போலீஸ் உடனே சாயிலுவ கஸ்டடியில் எடுத்து விசாரிச்சுருக்காங்க.

பாலேஷ் என்ற இளைஞருடன் வினோதாவுக்கு தொடர்பு
தெலங்கானாவுல உள்ள பண்டமீதிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாயிலு - வினோதா தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ரெண்டு பேரும் விவசாயம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. கல்யாணமான புதுசுல மனைவிகூட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த கணவன், வேண்டாத சேர்க்கையால மதுபோதைக்கு அடிமையாகிட்டாரு. அடுத்து எந்நேரமும் குடிச்சுட்டு வீட்டுக்கு வற கணவன், மனைவிய போட்டு அடிக்கிறது, சம்பாதிக்குற பணத்த வீட்டுக்கு கொடுக்காம, அத குடிச்சே அழிக்கிறதுமா இருந்துருக்காரு. இதனால கணவன் மனைவிக்கு இடையில தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுட்டே இருந்துருக்கு. இதுக்கிடையில வினோதாவுக்கு அதே பகுதியை சேந்த பாலேஷ்-ங்குற இளைஞர் கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் எல்லை மீறி பழகிட்டு ஜாலியா ஊர் சுத்திக்கிட்டும் இருந்துருக்காங்க.

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவன்
இந்த விஷயம் அடுத்த கொஞ்சம் நாட்களையே கணவன் சாயிலுக்கு தெரிய வந்துருக்கு. இதனால ஆத்திரமடைஞ்ச கணவன், கட்டுன புருஷன் நான் உயிரோட இருக்கும் போது நீ இன்னொருத்தன் கூட ஊர் சுத்திட்டு இருக்கியா, இதெல்லாம் நல்லது கிடையாது, ஒழுங்கா அவன் கூட பழகுறத நிறுத்து, அப்படி இல்லன்னா உன்னை கொன்னுருவேன்னு மிரட்டிருக்காரு. அதே மாதிரி இளைஞர் பாலேஷ்க்கும் ஃபோன் பண்ணி இதுக்கப்புறம் நீ என் மனைவி கூட பேசுறது எனக்கு தெரிய வந்ததுன்னா, உன்னைய சும்மா விடமாட்டேன்னு திட்டி எச்சரிக்கை விடுத்துருக்காரு. இதனால ரெண்டு பேரும் கொஞ்சம் நாட்கள் மட்டும் ஒருத்தர ஒருத்தர் பாக்காம, பேசாம இருந்துருக்காங்க. அதுக்கப்புறம் மறுபடியும் ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சுருக்காங்க.


சாயிலுவை கைது செய்து போலீசார் விசாரணை
இத தெரிஞ்சு ஆத்திரமடைஞ்ச கணவன் வினோதாவ கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு வினோதா, கணவன் கிட்ட கழிவறைக்கு போறதா சொல்லிட்டு கிளம்பிருக்காங்க. ஆனா மனைவி மேல சந்தேகமடைஞ்ச கணவன், அவங்கள பின்தொடர்ந்து போய்ருக்காரு. அப்ப பாலேஷ்க்கு ஃபோன் பண்ணி வரவச்சு மனைவி அங்குள்ள ஒரு வயல்ல அவரு கூட தனிமையில இருந்துருக்காங்க. இதபாத்து கோபமான கணவன் கையில இருந்த கோடாரியால பாலேஷோட தலையிலையே ஓங்கி வெட்டிருக்காரு. இதுல ரத்தம் அதிகமா வெளியேறி பாலேஷ் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு. இதபாத்து பதறிப்போன மனைவி அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. அடுத்து நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போன கணவன், குற்றத்தை ஒத்துக்கிட்டு காவல் நிலையத்துல சரணடைஞ்சுட்டாரு. அதுக்கடுத்து சாயிலுவ அரெஸ்ட் பண்ண போலீஸ் அவர சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
பதற வைக்கும் பின்னணி, கால்வாயில் 6 வயது சிறுமியின் சடலம்

பதற வைக்கும் பின்னணி, கால்வாயில் 6 வயது சிறுமியின் சடலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

0
8 mins agoshare
Congress office








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved