news-tamil-logo

3/22/2026, 12:22:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பதற வைக்கும் பின்னணி, கால்வாயில் 6 வயது சிறுமியின் சடலம்
tv

Also Watch

tv

Read this

பதற வைக்கும் பின்னணி, கால்வாயில் 6 வயது சிறுமியின் சடலம்

கெரூர், மகாராஷ்டிரா

Posted on: Feb 04, 2026 10:59 AM

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கால்வாயில் சடலமாக கிடந்த 6 வயது சிறுமி. பைக்கில் அழைத்து வந்து சிறுமியை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்த தகப்பன். கிராம பஞ்சாயத்து தேர்தலில் நிற்க பெற்ற மகளையே பகடைக்காயாக பயன்படுத்திய பயங்கரம். சிறுமியை தந்தை கொலை செய்தது ஏன்? கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கும் சிறுமி கொலை செய்யப்பட்டதற்கும் என்ன சம்மந்தம்? பின்னணி என்ன?

ஒரு இளைஞருடன் பைக்கில் சிறுமி வந்த சிசிடிவி காட்சி
கடந்த ஜனவரி 30ஆம் தேதி நிஜாம் சாகர் கால்வாயில ஒரு சிறுமியோட சடலம் கெடந்துருக்குது. அந்த சடலத்தை மீட்ட போலீசார், அந்த கால்வாய் உள்ள பகுதிகள்ல இருந்த சிசிடிவி கேமராக்களை செக் பண்ணிருக்காங்க. அப்போ, பைக்ல ஒரு இளைஞர்கூட சிறுமி வர்றது, திரும்பி அந்த பைக் போறப்ப இளைஞர் மட்டுமே போன காட்சி பதிவாகி இருந்துருக்குது. அடுத்து, அந்த பைக் எண்ணை வச்சி அது யாரோடதுனு விசாரணையில இறங்கிருக்காங்க. அப்போ, மகாராஷ்டிரா மாநிலம் நான்தேடு மாவட்டம் கெரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் கோண்டுமங்களோட பைக் அப்டிங்குறது தெரியவந்துருக்கு. அதுக்குப்பிறகு, அந்த நபரோட வீட்டுக்கே நேர்ல போய் விசாரிச்சிருக்காங்க போலீசார்.

பாண்டுரங்கிடம் விசாரித்தபோது வெளியான அதிர்ச்சி தகவல்
அப்போ, தன்னோட மகளுக்கு உடல்நிலை சரியில்லைனும், ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்குறதாகவும் சொல்லிருக்காரு பாண்டுரங். அதக்கேட்டு, ஷாக் ஆன அவரோட மனைவியும் குடும்பத்தாரும் சிறுமி நல்லாதான் இருந்தா, எப்படி கால்வாய்ல சடலமா மீட்கப்பட்டானு எதுவுமே புரியலனு சொல்லிருக்காங்க. அப்போ, பாண்டுரங் முகத்துல படபடப்ப கவனிச்ச போலீசார் அவர்கிட்ட துருவித்துருவி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், ஒரு அதிர்ச்சி சம்பவமே அம்பலமாச்சு.

2 குழந்தைகளுக்கு மேல் இருந்ததால் பாண்டுரங் கவலை
தன்னோட கிராமத்துலயே சலூன் கடை நடத்திட்டு இருக்காரு பாண்டுரங். அவருக்கு மனைவியும் 3 பிள்ளைகளும் இருந்துருக்காங்க. இதுக்குமத்தியில வரும் ஜூன் மாசம் நடக்க உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல்ல போட்டியிட விருப்பப்பட்ருக்காரு பாண்டுரங். ஆனா, மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ரெண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் தேர்தல்ல போட்டியிட முடியாது. அப்படி இருந்தும் பதவி ஆசை பாண்டுரங்க சும்மா இருக்கவிடல. அதனால, தன்னோட நண்பரும் தற்போதைய பஞ்சாயத்து தலைவருமான ஷிண்டே கணேஷ்கிட்ட தன்னோட ஆசைய சொன்ன பாண்டுரங், ரெண்டாவது பிறக்கப்போற குழந்தை ரெட்டை பிள்ளையா பிறக்கும்னு நான் என்ன கனவா கண்டேனு புலம்பினதோட தன்னோட மகன் பாபுவை தத்து குடுக்கலாம்னு இருக்குறதா சொல்லிருக்காரு.

பாண்டுரங்குக்கு ஐடியா கொடுத்த ஷிண்டே கணேஷ்
ஆனா, மகனோட பேரு ஏற்கெனவே பிறப்பு சான்றிதழ்ல இருந்ததால, புனே கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குக்குப்போய் சிறுவனோட பிறப்பு சான்றிதழ்ல பேர மாத்த முயற்சி பண்ணிருக்காரு. அப்போ, அதுக்கு சாத்தியமே இல்லங்குற தகவல அலுவலகத்துல இருந்த அதிகாரிகள் சொல்லிருக்காங்க. அடுத்து என்ன பண்ணலாம்னு பாண்டுரங் யோசிச்சிட்டு இருந்துருக்காரு. அப்போ, ஒரே ஒரு வழிதான் இருக்குதுனு கொடூர திட்டத்த சொல்லிருக்காரு ஷிண்டே கணேஷ். ஒரு மகளை கொன்னுட்டா நினைச்சபடியே தேர்தல்ல போட்டியிடலாம்னு நண்பன் சொல்லிருக்காரு.

6 வயது மகள் பிராச்சியை பைக்கில் அழைத்து சென்ற தந்தை
இதக்கேட்டு கொந்தளிக்க வேண்டிய தகப்பன் பாண்டுரங், அப்டியா? நல்ல ஐடியாவா இருக்குதேனு மனசாட்சி இல்லாம சந்தோஷப்பட்ருக்காரு. அந்த ஐடியாவை அப்படியே உள்வாங்கின பாண்டுரங், தன்னோட ரெட்டை பிள்ளைகள்ல ஒரு மகளான ஆறு வயசு சிறுமி பிராச்சியை, கடைக்கு போய் திண்பண்டம் வாங்கிட்டு வரலாம்னு பைக்ல அழைச்சிட்டு போயிருக்காரு. அப்பா அழைச்சதும் ஆனந்தமா துள்ளி ஓடிவந்து பைக்ல உக்காந்த மகளை, நிஜாமாபாத் ஏஆர்பீ கேம்ப் பக்கத்துல உள்ள நிஜாம்சாகர் கால்வாய்ல தள்ளிவிட்ருக்காரு. தண்ணில மீன் ஓடுது பாருனு சொல்லி மகளை எட்டிப்பாக்க சொல்லி தள்ளி விட்ருக்காரு பாண்டுரங். அப்பா, தள்ளிவிட்டதும் கைகள் ரெண்டையும் மேல தூக்கி சிலநொடி உயிருக்குப் போராடுன சிறுமி அப்படியே நீர்ல மூழ்கி உயிரிழந்துட்டாங்க.

பஞ்சாயத்து தலைவர் ஷிண்டே கணேஷையும் கைது செய்த போலீஸ்
அடுத்து, சிறுமியோட சடலம் கால்வாய்ல கிடந்தத பாத்த மக்கள் போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. பைக் எண்ணை வச்சி விசாரணையில இறங்குன போலீசார், பெத்த தகப்பன் வாயாலேயே மொத்த உண்மையையும் கறந்துட்டாங்க. பதவி வெறியில பெத்த மகளையே கொலை செஞ்ச தகப்பனையும், அந்த கொலைக்கு ஐடியா குடுத்த பஞ்சாயத்து தலைவர் ஷிண்டே கணேசையும் சிறையில தள்ளிருக்காங்க காவல்துறையினர்.

Related Link
எம்.எல்.ஏ.வின் வெறி - அதிர்ச்சி ஆதாரம்

எம்.எல்.ஏ.வின் வெறி - அதிர்ச்சி ஆதாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
23 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved