news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமின் மனு, தீர்ப்பை ஒத்திவைத்து நீதிமன்றம் ஆணை
tv

Also Watch

சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமின் மனு, தீர்ப்பை ஒத்திவைத்து நீதிமன்றம் ஆணை

போக்சோ வழக்கில் அதிரடி

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, அவரது கணவர் ஆகியோரின் ஜாமின் மனு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை போக்சோ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பரபரப்பான போக்சோ வழக்கு
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே குற்றச்சாட்டில் வீரமணி உதவியாளர் கணேசன் கடந்த வாரம் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். கைது செய்யப்பட்டு உள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஜாமின் தர எதிர்ப்பு
இந்த மனுக்களுக்கு பதிலளித்து, காவல்துறை தரப்பில் கூறியதாவது; வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க வீரமணியிடம் இருந்து சாந்தி ரூ.24 லட்சத்து 63,000 பெற்றுள்ளார்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண வேண்டியுள்ளது. இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளைக் கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்பு உள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளதால் இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.

முறையாக கைது செய்யப்படவில்லை
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பு இன்று, விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது;
இவர்கள் முறையாகக் கைது செய்யப்படவில்லை, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை. ஏற்கெனவே காவல்துறை காவலில் எடுத்து விசாரணை முடித்துள்ளனர். எனவே இதற்கு மேல் சிறையில் அடைக்க வேண்டிய தேவை இல்லை. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் வாதிட்டார்.

மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைது செய்து 40 நாட்கள் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். மேலும், விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று வாதிட்டார். தனியார் தொண்டு நிறுவனம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, நீதிபதி ஒத்தி வைத்தார்.

Related Link
வீரமணியால் பாதித்த சிறுமிகள் எத்தனை பேர்? அந்த மாதிரி வீடியோக்கள் நிறைய உள்ளதா?

வீரமணியால் பாதித்த சிறுமிகள் எத்தனை பேர்? அந்த மாதிரி வீடியோக்கள் நிறைய உள்ளதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved