news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்வர் விஜய் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
tv

Also Watch

முதல்வர் விஜய் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாருக்கு மரியாதை

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதிநாள் உறுதி மொழியை முதலமைச்சர் விஜய் ஏற்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகளும் உறுதி மொழி ஏற்றனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள்...
சென்னை, தலைமைச் செயலகம், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.

பெரியாருக்கு மரியாதை
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது, தந்தை பெரியாருக்கு, முதல்வர் விஜய் மலர் தூவி முதலமைச்சர் மரியாதை செய்தார்.

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களும் பங்கேற்றனர்.

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சமூகநீதி நாள் உறுதிமொழியை முதலமைச்சர் ஜோசப் விஜய் வாசிக்க அனைவரும் வழிமொழிந்தனர்.

உறுதிமொழி ஏற்பு
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்,” என்று
சமூகநீதி நாளில் உறுதிமொழி முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

Related Link

"பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்" என முதல்வர் விஜய் பதிவு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved