மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. வருகின்ற 29-ஆம் தேதி நடைபெற உள்ள மவுனி அமாவாசை தினத்தன்று சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன், வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.