Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 10:48 AM
By: Web Team

அரசியலமைப்பை தோற்றுவித்தவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து செயலாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், வலிமையான இந்தியாவை கட்டமைக்கும் நமது திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருக்கும் வரை, ஒவ்வொரு இந்தியரின் உரிமைகளும் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது எந்த வகையான தாக்குதலையும் நடத்த அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கவும் நாட்டு மக்களுக்கு, ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved