news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news TEXLA படத்தின் பூஜைக்கு திரண்டு வந்த திரையுலகம்
tv

Also Watch

TEXLA படத்தின் பூஜைக்கு திரண்டு வந்த திரையுலகம்

சென்னை

65

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

TEXLA திரைப்படத்தின், பூஜைக்கு திரண்டு வந்த திரையுலகம், வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்​கத்​தில் உரு​வாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்​தில் ஜெய், சுராஜ் வெஞ்​சரமூடு, ஆனந்​த​ராஜ், ஜி.எம்​.சுந்​தர், ஜார்ஜ் மரியன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்றனர். யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கும் இந்த திரைப்படத்​தைக் கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில், கண்​ணன் ரவி தயாரிக்​கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்​கிறார். இப்​படத்​தின், பூஜை சென்​னை​யில் நடந்​தது.

சீமான் பங்கேற்பு, வாழ்த்து
இந்த விழா​வில், திரைப் படக் ​குழு​வினருடன் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், லதா ரஜினி​காந்த், தயாரிப்​பாளர் ஆர்​.பி.சவுத்​ரி, இயக்​குநர் பாலா, நடிகர் சமுத்​திரக்​கனி ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாகக் கலந்து கொண்​டனர்.

ஒரு நல்ல தொடக்​கம்

சீமான் பேசியதாவது;
ஒரு நல்ல தொடக்​கம் பாதி வெற்​றிக்​குச் சமம் என்று சொல்​கிறார்​கள். அந்த வகை​யில் ‘டெக்​ஸ்​லா’ படத்​தின் தொடக்​கம் சிறப்​பாக அமைந்​திருக்​கிறது. இங்கு ஒரு படம் தயாரிப்​ப​தற்கு எவ்​வளவு பிரச்​சினை​கள் இருக்​கின்றன என்று தெரி​யும்.
தயாரிப்​பாளர் கண்​ணன் ரவி ஒரே நேரத்​தில் 16 திரைப்​படங்​களைத் தயாரித்​துக் கொண்​டிருக்​கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்​திருக்​கும் பேரன்பையும், பெரும் காதலை​யும் நாம் புரிந்து கொள்ள முடி​யும். அவரது தயாரிப்​பில் அண்​மை​யில் வெளி​யான ‘தலை​வர் தம்பி தலை​மை​யில்’ திரைப்​படம் பெரிய வெற்​றியைப் பெற்​றிருக்​கிறது. இதற்கு அடுத்து இந்த படத்​தைத் தொடங்கி இருக்​கிறார்​கள். ஒரு வெற்றி என்​பது பலருடைய வாழ்க்​கை​யில் பெரும் கொண்​டாட்​ட​மாக அமைந்து விடு​கிறது. எப்​படிப் பார்த்​தா​லும் வெற்​றிக்​குத் தேவை கடுமை​யான உழைப்​பு ​தான். கடுமை​யாக உழைக்​கக் ​கூடிய கலைஞர்​கள் ஒன்​றிணைந்​து உள்ளனர், வாழ்த்​துக்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.

கவனம் பெற்ற டீசர்
Texla திரைப்படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்களைப் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. கிராமத்துப் பின்னணியில், ஏழ்மையான சிறுவர்கள் ஒரு குடிசையில் அமர்ந்து சினிமா பார்ப்பதற்காகக் காத்திருக்கும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்தன. சூரிய ஒளியைக் கண்ணாடித் துண்டு மூலம் பிரதிபலிக்கச் செய்து, துணித் திரையில் ‘டெக்ஸ்லா’ என்ற பெயர் ஒளிர்வது போன்ற அந்த டீசர், கடந்த காலத்தின் மீதான ஏக்கத்தையும், சினிமா மீதான காதலையும் பிரதிபலித்து உள்ளது.

Related Link

"மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved