கர்நாடகாவில், நூற்றுக்கணக்கானோர் மத்தியில் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெண்ணின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு அந்த பெண் தான் காரணம் என கூறி உயிரிழந்தவரின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கியதாக தெரிகிறது.