Also Watch
Read this

சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 25
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 27
காலையில், 560 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,720 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து, 14,725 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 28
ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 1,18,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 உயர்ந்து, ரூ.14,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 29
சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 30
ஞாயிற்றுக்கிமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,505-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

ஆகஸ்ட் 31
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,14,960க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 25 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 26 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 27 - ரூ.1,17,800
ஆகஸ்ட் 28 - ரூ.1,18,400
ஆகஸ்ட் 29 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 30 - ரூ.1,16,040
ஆகஸ்ட் 31 - ரூ.1,14,960
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved