Also Watch
Read this
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவிலிருந்து திடீரென விலகி உள்ளார். கட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் விலகுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கோடான கோடி நன்றி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தோப்பு வெங்கடாச்சலம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
என் மீது நம்பிக்கை வைத்து,திமுக மாவட்ட பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலகிக் கொள்கிறேன்
ஆனால், நான் மாவட்ட செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் திமுகவில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை
ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் சமீபத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதிமுகவில் 2011ஆம் ஆண்டு பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2021ல் திமுகவில் இணைந்தார். தற்போது எந்த கட்சியிலும் உடனே இணையப் போவதில்லை என்றும், ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved