Also Watch
Read this
திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி, சென்னை டிஜிபி அலுவலக நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல்துறை புலனாய்வு ஐ.ஜி. ஆக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அக்டோபர் 21ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவில் சப்ளைஸ் சிஐடி ஐ.ஜி.
பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் ஐபிஎஸ், தற்போது சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த ரூபேஷ் குமார் மீனாவுக்குப் பதிலாக இவர், தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர்
ஏற்கெனவே சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா, தற்போது திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் காமினி, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நடவடிக்கை
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் SIT விசாரணைக்கு உள்ளான ராதிகா IPS மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
டிஜிபி அலுவலக நிர்வாகத்துறை IG ஆக இருந்த ராதிகா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராதிகா வகித்து வந்த பொறுப்பிற்கு காமினி IPS நியமிக்கப்பட்டு உள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved