news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காற்றில் பறக்கும் சட்டம் ஒழுங்கு என உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

காற்றில் பறக்கும் சட்டம் ஒழுங்கு என உதயநிதி விமர்சனம்

காவல்துறை தடியடிக்கு கண்டனம்

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிவகங்கை இரட்டைக்கொ* வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருப்பதாக உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

காலம் தாழ்த்துவது ஏன்?
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
’டம்மி’ முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொ*கள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொ* செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?

காவல்துறை தடியடி
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொ*யானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த இரட்டைக்கொ* சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Link
தலைநகரில் தள்ளாடும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

தலைநகரில் தள்ளாடும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved