ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டும் கட்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி நரேலா சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் ஈடுபடுவது மற்றும் ஓட்டுக்காக பொய்களை பரப்புவதை மட்டுமே ஆம் ஆத்மி செய்ததாக விமர்சித்தார்.