Also Watch
Read this

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அமெரிக்காவில் இருந்து 5 ஆயிரம் சிறப்பு பேரிடர் மீட்பு பொருட்கள் உள்பட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

5,000 சிறப்பு பேரிடர் மீட்பு பொருட்கள்
முதலுதவி பெட்டிகள் 500, ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் இருந்து ஐந்தாவது விமானத்தில் ஐந்தரை டன் அத்தியாவசிய மருந்துகளுடன் 11 பேர் கொண்ட மீட்பு குழுவினரும் நேபாளம் சென்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியது
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டிய நிலையில், பெரு வெள்ளம் நுவாகோட் மாவட்டத்தை துடைத்துச் சென்ற பேரழிவின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

எழில் கொஞ்சும் பசுமையான நகராக இருந்த தேவிகாட் பகுதி தற்போது சேறும், சகதியுமாகவும் உருக்குலைந்து காட்சியளிக்கிறது.

பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால், மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

திபெத்தில் மட்டும் சுமார் 104 பேர் மாயம்
நேபாள பேரழிவு வெள்ளப்பெருக்கில் திபெத் பகுதியில் மட்டும் சுமார் 104 நேபாளிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள நகரங்களையும் கிராமங்களையும் பேரழிவுக்கு உள்ளாகிய இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், திபெத்தில் உள்ள கெருங் எல்லைப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 நேபாள நாட்டினர் சிக்கியுள்ளதாகவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved