Also Watch
Read this
முதல்வர் விஜய்யோட இடைத்தேர்தல் பிரச்சாரங்களை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தோட ஒப்பிட்டு, அதிகாரிகள் மத்தியில ஒரு பேச்சும், இடைத்தேர்தல்ல தவெகவோட கவர்ச்சி குறையுதாங்கறத பத்துன ஒரு ரிப்போர்ட்டும் பனையூருக்குப் போயிருக்காம்.
எம்.ஜி.ஆர். பிரச்சாரங்களையும், ஜெயலலிதாவோட பிரச்சாரங்களையும் பக்கத்துல இருந்து பார்த்த சில போலீஸ் உயரதிகாரிகள் இப்பவும் சர்வீஸ்ல இருக்காங்க.
இந்த ஆபீஸர்ஸ் முதல்வர் விஜய்யோட இடைத்தேர்தல் பிரச்சாரங்களை வாட்ச் பண்ணிட்டு, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்காக காத்திருந்தது போலவே விஜயையும் மக்கள் காத்திருந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க, குறிப்பா, ரெண்டு தொகுதிகள்லயும் சாலை ஓரங்கள்ல முதல்வரைப்பார்க்கறதுக்காக இருந்தவங்கள்ல பெரும்பாலானவங்க அதிமுகவோட முக்கிய நிர்வாகிகள்ங்கற தகவலையும் தவெக கட்சித் தலைமைக்கு சொல்லியிருக்காங்களாம்.

இதோட அடிப்படையிலதான் அதிமுக இப்போ தவெகவா மாறிடுச்சுன்னு அமைச்சர்கள் பேசிக்கிட்டிருக்காங்களாம்.

விஜய்க்கு இப்படி ஒரு பாஸிட்டிவான ரிப்போர்ட்டை அதிகாரிங்க கொடுத்தாலும், இடைத்தேர்தல்ல விஜய்க்கும் தவெகவுக்கும் மக்களிடம் இருந்த பழைய கிரேஸ்(CRAZE) கொஞ்சம் குறைஞ்சிருக்கறதா இண்டலிஜென்ஸ், ஆட்சி மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட்ட கொடுத்திருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved