news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கள்ளக்காதலனுடன் மனைவி, கருவை கலைத்து ஆக்டிங், கணவன் புகாரால் கைது
tv

Also Watch

கள்ளக்காதலனுடன் மனைவி, கருவை கலைத்து ஆக்டிங், கணவன் புகாரால் கைது

’அவர்தான் என்னோட அழகை ஆராதிக்கிறாரு’

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை அருகே தன்னை நம்ப வைத்து முதுகில் குத்திய மனைவி, தனது தாயிடம் இருந்து 150 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளியை திருடிக் கொண்டுபோய் கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றுவதாக கணவன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கள்ளக்காதலன் மூலம் உருவான கர்ப்பத்தையே கலைத்துவிட்டு, ஸ்மார்ட்டாக நாடகம் ஆடியதாக கணவன் மனம் குமுறும் நிலையில் கேரளம் மாநிலத்திற்கு சென்று மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீயில்லாமல் நான் இல்லை
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த 43 வயதான ஆதித்தன் தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். கை நிறைய சம்பளம் வாங்கி வரும் இவருக்கும் இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகைக்கடைக்கு சென்றபோது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த ஜிஸ்னு என்ற நபருடன் இலக்கியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருமாற, நீயில்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. தோழிக்கு திருமணம், பிறந்த நாள் விழா என பல உருட்டு காரணங்களைகூறி வெளியிடங்களில் இருவரும் தங்க, அதன்விளைவாக இலக்கியா கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் நடவடிக்கையில்...
ஏற்கெனவே கணவனை விவாகரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நேரம் பார்த்து காத்திருந்த இலக்கியா, கர்ப்பத்தை கலைத்துவிட்டு பழியை ஆதித்தன் மீது தூக்கி போட்டதாக தெரிகிறது. கர்ப்பிணி என்றும் பாராமல் தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதால் தான் வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டதாக புகார் அளித்து, கணவனை உள்ளே தூக்கி வைத்த இலக்கியா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிட்டதாக தெரிகிறது.

மனைவியின் நடவடிக்கையில் பெரிய மாற்றத்தைக்கண்ட ஆதித்தனுக்கு, அப்போதுதான் தெரிந்தது கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்பதும் ஜிஸ்னுவும், இலக்கியாவும் கள்ளக்காதலில் இருக்கிறார்கள் என்பதும். இதனிடையே, ஜிஸ்னுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் விவகாரம் தெரியவர, குழந்தையை தூக்கிக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

முதுகில் குத்திவிட்டதாக...
அதுகுறித்து இலக்கியாவிடம் ஜிஸ்னுவின் உறவினர் கேட்டபோது, நான் இல்லாவிட்டால் அவர் தற்கொ* செய்துவிடுவார், தங்களின் காதல் நிஜம், பிடிக்காத வாழ்க்கையை இனி இருவரும் தொடர முடியாது, அதனால் விரைவில் விவாகரத்து செய்துவிட்டு நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம் எனக்கூறி உள்ளார்.

கள்ளக்காதலனுக்கு அனுப்பிய காதல் மெசேஜ், போட்டோ, ஆடியோக்களை பார்த்து மனம் உடைந்த ஆதித்தன் மனைவி இலக்கியாவிடம் அதுகுறித்து கேட்டபோது, ஜிஸ்னு தனக்கு ஐ லவ் யூ சொல்லி தனது அழகை பாராட்டுவதாகவும், அவரைதான் தனக்கு பிடித்துள்ளதாகவும் கூறி உள்ளார் இலக்கியா. கட்டிய மனைவியே தன்னை முதுகுகில் குத்திவிட்டதாக வருத்தப்பட்ட ஆதித்தன், தனது பிள்ளையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

கோழிக்கோட்டிற்கே சென்று கைது
இதனால் இலக்கியா, கணவன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்து மாமியாரை தாக்கி 150 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து திருடிக்கொண்டு கோழிக்கோடுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், பொறுமையிழந்த ஆதித்தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுத்து நீதிமன்றத்தை நாடி உள்ளார். அதன்பிறகே, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இலக்கியாவை கோழிக்கோட்டிற்கே சென்று கைது செய்த போலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை

பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved