Also Watch
Read this
By: Manigandan Raja

85 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்ததுள்ளது. இது 2022-ல் 107 பதக்கங்களுடன் பெற்ற அதே தரவரிசையாகும்.
சில போட்டிகள் இடம்பெறாததும், வீரர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்பட முடியாததும் இந்திய அணியால் பதக்க எண்ணிக்கையில் நூறு என்ற இலக்கைத் தாண்ட முடியாமல் போனது.
இந்தியா - பிரேசில் நடப்பு கால்பந்து போட்டி கேலிக்கூத்தானது
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்புப் போட்டி ஒரு கேலிக்கூத்து என்று முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சங் பூட்டியா (Bhaichung Bhutia) விமர்சித்துள்ளார்.

உலகின் முன்னணி அணியான பிரேசிலுடன், தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய அணி விளையாடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, இது பகுத்தறிவற்ற செயல் என்று அவர் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
குழந்தையை தொட்டிலில் தாலாட்டுவது போன்று அயூப் செய்கை
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அவுட் செய்த பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சாய்ம் அயூப், "தொட்டிலில் குழந்தையைத் தாலாட்டுவது" போன்ற அநாகரிக சைகை செய்து வழியனுப்பினார்.

சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காகவே அயூப் அவ்வாறு செய்துள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கடுமையாக சாடியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved