Also Watch
Read this
By: Web Team

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் லீக் தொடரில் அவரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இது குறித்து பிக்பாஸ் லீக் நிர்வாகத்தின் சிஇஓ கூறுகையில், பிக்பாஸ் தொடரில், அஷ்வின் பங்கு பெறுவதன் மூலம், எதிர்காலத்தில் பல்வேறு இந்திய வீரர்கள் இந்த தொடரில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பிக்பாஸ் லீக் தொடருக்கான ஏலம் ஏற்கனவே முடிந்து விட்டாலும், 8 அணிகளும் அஷ்வினை தங்கள் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved