Also Watch
Read this
By: Manigandan Raja

வேதனையை கொட்டி தீர்த்த சூர்யகுமார்
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியபோது அதிர்ச்சியாகி ஏமாற்றம் அடைந்ததாகவும், தன்னுடைய தலைமையில் 2 ஆண்டுகளாக எந்த ஒரு டி20 தொடரிலும் இந்திய அணி தோற்கவில்லை என இந்திய வீரர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கேப்டனாக அடுத்த 2 ஆண்டுகள் தொடர்வேன், ஒலிம்பிக்ஸ் மற்றும் அடுத்த டி20 உலகக் கோப்பையிலும் அணியை வழிநடத்துவேன் என நினைத்தேன் என்றும், எல்லாமே சிறப்பாக போகும் போது ஏன் இந்த மாற்றம் என அதிர்ச்சியாக இருந்தது என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
இம்ரான் கான் குறித்து ஊடகங்களிடம் பேசக்கூடாது
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுத்த நிலையில், அவரைப் பற்றி ஊடகங்களிடம் பேசக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், இங்கிலாந்தில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், உலகக்கோப்பை வென்றவருமான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இடம்பெற்றிருந்த நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved