Also Watch
Read this
By: Manigandan Raja

உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் சின்டாரோவ் 2-ம் இடம்
அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில், பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ 21.5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்தனர்.

இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதி கொண்டதில், யாருக்கும் வெற்றி கிடைக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு சுற்று எஞ்சியிருந்தபோது மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜவோகிர் சிண்டாரோவ் 2-வது இடத்தை பிடித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved