ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது என சஞ்சீவ் கோயங்காவை கே.எல். ராகுல் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தபோது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது. இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.