இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில், 'IMPACT PALYER OF THER SERIES'-க்கான விருது கேப்டன் சிரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் டி-20 போட்டியில் 43 பந்துகளில் 102 ரன்களை விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 5 போட்டிகளிலும் சேர்த்து 181 ரன்களை குவித்தார்.
வாய்ப்பு வழங்குவதும், மறுப்பதும் தேர்வுக் குழுவின்முடிவே
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குவதும், மறுப்பதும் தேர்வுக் குழுவின் முடிவை மட்டுமே சார்ந்தது என முன்னணி வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி கருத்து தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முகம்மது ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அடுத்து வரும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று யாருமே கிடையாது
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான மாற்று வீரரைக் கண்டுபிடிப்பது கடினம் எனக் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவரை போல் திறமையான ஒரு வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வேறு திறமைகளை கொண்ட மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.