Also Watch
Read this
By: Manigandan Raja

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 3வது லிக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 16புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கிறிஸ் கெயில்
கேரளம் மாநிலம் கோட்டயம் அருகே புதுப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், அங்கிருந்த முன்னாள் முதல்வர் உம்மன் சண்டி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் கிறிஸ் கெய்லுக்கு யானை பொம்மை பரிசாக வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved