Also Watch
Read this
By: Manigandan Raja

சூர்யகுமார் உடன் மும்பை அணி நிர்வாகம் ஆலோசனை
சூர்யகுமார் யாதவ் மும்பை அணியிலிருந்து வெளியேறுவதாக வதந்தி பரப்பப்பட்ட நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் தலைமைத்துவப் பொறுப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் அணிக்கு திரும்ப விரும்பும் முகம்மது ஷமி
இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இளம் வீரர் இஷான் கிஷன் கருத்து தெரிவித்தார். ஷமியின் வயதை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என்றும், வயது என்பது வெறும் எண் மட்டுமே எனவும் இஷான் கிஷன் கூறினார்.

இங்கிலாந்து-இலங்கை இடையேயாப டி-20, ஒருநாள் தொடர்
இலங்கை அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் தலைமையிலான அணியில், ரிஹான் அகமது, ஆர்ச்சர், பட்லர், வில் ஜாக்ஸ், ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் டி-20 போட்டி இங்கிலாந்தில் வரும்15ஆம் தேதி தொடங்குகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved