தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான யு19 ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 35 ஓவர்களில் வெறும் 160 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியால் 3க்கு பூஜியம் என தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.இதையும் படியுங்கள் : பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர்