news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 2,500 பேர் மாயம்: மீட்புப்பணிகள் தொடர்ந்து தீவிரம்
tv

Also Watch

2,500 பேர் மாயம்: மீட்புப்பணிகள் தொடர்ந்து தீவிரம்

நேபாள அரசு தகவல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal flood

நேபாளம் பெருவெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் உள்ள போடேகோசி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்ததால் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு அமெரிக்காவில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு

காசாவின் மத்திய பகுதியில் டெய்ர் அல்-பலாஹ் நகரில் பேக்கரி அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3 வயது சிறுவன் உட்பட இருவர் பலியானதாக காசா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் தயீம் ஹம்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved