Also Watch
Read this
By: Manigandan Raja

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் எனத் தகவல்
இஸ்ரேலுக்கு சுமார் 26 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத தொகுப்பை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுப்பில், ஒரு டன் எடையுள்ள குண்டுகள், மிகுந்த அழிவை ஏற்படுத்தும் சில ஆயுதங்கள் உள்ளிட்டவை அடங்கும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 70 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை இஸ்ரேலுக்கு கொடுக்க டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சக்கரத்தின் டயர் கழன்றது
ஈரானின் மஷ்ஹத் ((Mashhad)) நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு ((Kermanshah)) இயக்கப்பட்ட விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கும் சக்கரங்களில் ஒன்று கழன்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் அச்சத்தில் அலறிய வீடியோ வெளியாகியுள்ளது.

செபெஹ்ரான் ((Sepehran ))ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம், தரையிறக்கப்பட்டபோது விமானத்தின் மேற்பகுதியின் சில பகுதிகள் உடைந்து பயணிகள் மீது விழுந்தன. இதனால் யாருக்கும் எதுவும் காயம் ஏற்படவில்லை என்றும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்தது.
குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி
வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மக்கள் அடர்த்தி மிகுந்த வான் காவோ ((Van Cao)) குடியிருப்புப் பகுதியில் உள்ள நான்கு மாடி வீட்டில் அதிகாலை ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved