news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீது திடீர் தாக்குதல்
tv

Also Watch

ஏமனின் அல்-மக்கா துறைமுகம் மீது திடீர் தாக்குதல்

அல்-மக்கா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ட்ரோன்களை ஏவி தாக்குதல்

பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் 

செங்கடலில் உள்ள ஏமனின் அல்-மக்கா ((al-Makha)) துறைமுகத்தின் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். வடமேற்கு ஏமனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது சவுதி நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் ஆதரவு பெற்ற ஏமன் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ள ஹவுதிக்கள்.

அல்-மக்கா ((al-Makha)) துறைமுகத்திலும் சவுதியின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

அராம்கோ நிறுவன சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் அராம்கோ நிறுவனத்தின் ஜாஸன் ((Jazan)) சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாளொன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு உற்பத்தி நடைபெறும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில்.

டிரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்து, அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு அணைக்கப்பட்டதாக எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு நடுவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட அடுத்த 2 நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 

சவுதி அரேபியாவில் உள்ள ஃபர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வங்கதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் ரியாத் அருகே உள்ள மூசா சானியா தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மரச்சாமான்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

Related Link
ட்ரம்பின் கோல்ஃப் திடலுக்கு மேல் பறந்த சிவில் விமானங்கள்

ட்ரம்பின் கோல்ஃப் திடலுக்கு மேல் பறந்த சிவில் விமானங்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JSSC தேர்வு முறைகேடு மூன்று அதிகாரிகள் ராஜினாமா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved