news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்ணயித்த விசா நடைமுறைக்கு தடை
tv

Also Watch

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்ணயித்த விசா நடைமுறைக்கு தடை

உள்நாட்டு பாதுகாப்புத்துறை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழக்கும் எஃப்-1 விசா காலவரம்பு

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள், பத்திரிகையாளர்களின் விசாவுக்கு கால வரம்பு நிர்ணயித்த, அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு வழங்கப்படும் எப் -1 விசாக்களுக்கான அதிகபட்ச காலவரம்பை 4 ஆண்டுகளாகவும், பத்திரிகையாளர்களின் விசாவை 240 நாட்களாகவும் குறைத்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஜூலை மாதம் புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இந்த புதிய விசா நடைமுறை மாணவர்களின் கல்வியை பெருமளவு பாதிக்கும் எனக் கூறி 500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

விண்வெளியில் ஆயுதங்கள்: முதல் முறையாக அமெரிக்கா ஒப்புதல்

விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அமெரிக்கா முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற விமானம், விண்வெளி, சைபர் மாநாட்டில் பேசிய அமெரிக்க விமானப்படை செயலாளர் ட்ராய் மீன்க், எதிரிகளிடமிருந்து அமெரிக்க படைகளை பாதுகாக்க விண்வெளியில் உள்ள இந்த ஆயுதங்கள் அவசியம் என்று கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவும் சீனாவும் விண்வெளியை போர்க்களமாக பார்த்து, தங்களுடைய ஆயுதத் திறன்களை வளர்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.

ஈரானின் 2 சிறிய ரக படகுகளை அழித்த அமெரிக்க ராணுவம்

ஈரானின் 2 சிறிய ரக படகுகளை அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் 25 அடி நீளமுள்ள "செயில்ட்ரோன்" என்ற ஆளில்லா உளவு கப்பலை சிறிய படகுகள் மூலம் கைப்பற்ற ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முயன்றுள்ளது.

இதையறிந்த அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு ஆளில்லா வான்வழி ட்ரோன் மூலம் 2 ஏவுகணைகளை ஏவி அந்த இரு படகுகளையும் உடனடியாக அழித்துள்ளது. இந்த தாக்குதலில் படகுகளில் இருந்த ஈரானிய வீரர்கள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Link
நூதனமான கின்னஸ் சாதனை படைத்த கனடா ஆசாமி

நூதனமான கின்னஸ் சாதனை படைத்த கனடா ஆசாமி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியா அரசுக்கு ரூ.311 கோடி அபராதம் விதித்த தென்கொரிய நீதிமன்றம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved