Also Watch
Read this
By: Manigandan Raja

வங்தேசம் இந்தியாவுக்கு மற்றொரு பாகிஸ்தான்
வங்கதேசம் இந்தியாவுக்கு மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜீத் கூறியுள்ளார். ஷேக் ஹசீனா காணொலி வாயிலாக பங்கேற்ற இணையவழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், 2024 ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதால் ஆத்திரம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் ஹசீனா நிகழ்ச்சியில், அவரது அவாமி லீக் கட்சி முன்னாள் எம்.பி.யான ஷகிப் கலந்து கொண்ட நிலையில், சில மணி நேரங்களுக்கு பிறகு மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் உள்ள அவரது மூதாதையர் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved