news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சாக்சோனி-அன்ஹால்ட் மாநில தேர்தல் தீவிர வலதுசாரி கட்சி அபார வெற்றி
tv

Also Watch

சாக்சோனி-அன்ஹால்ட் மாநில தேர்தல் தீவிர வலதுசாரி கட்சி அபார வெற்றி

தீவிர வலதுசாரி கட்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெர்மனி

ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்

ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் ((Saxony-Anhalt)), தீவிர வலதுசாரி கட்சியான Alternative for Germany 43.8% வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

தனியாக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத அதே நேரத்தில், பிரதமர் Friedrich Merz-ன் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி 17.2% மட்டுமே பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் தோல்வியுற்றதே வலதுசாரி கட்சி வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலையை 2வது முறையாக உயர்த்திய ஈரான்

பல மாதங்களாக நீடிக்கும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிக அளவில் பயன்படுத்துவோருக்கான எரிபொருள் விலையை ஈரான் உயர்த்தியது.

ஏற்கனவே கடும் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு மக்களின் மீதான அழுத்தத்தை இந்த நடவடிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கிய ரஷ்யா

3 நாள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியது. அமெரிக்கத் தூதர்கள் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் தலைநகருக்கு சென்றதையடுத்து, கீவ் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார்.

இது திங்கட்கிழமை நள்ளிரவு உடன் முடிவடைந்த நிலையில் உக்ரைனின் போரிஸ்பில் ((Boryspil))மற்றும் ஃபாஸ்டிவ் (((Fastiv) ))மாவட்டங்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

Related Link
பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved