Also Watch
Read this
By: Manigandan Raja

மேற்காசிய பதற்றத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை
பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா இடையிலான புதிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முதல் குழுக் கூட்டம் இஸ்தான்புல்லில் நாளை நடைபெறுகிறது.
அதில், 3 நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும் என முத்தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து
ஜெர்மனியின் பவேரியா மாகாணம் ரோசன்ஹிம் நகர் ரெயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் உயிரிழந்தார்.

பர்ஸ்டன்பெல்ட்ப்ரூக் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர், கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
270 பேருடன் சென்ற படகு வடக்கு சைப்ரஸில் கவிழ்ந்து விபத்து
வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் சுமார் 270 பேருடன் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர். கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகம் நோக்கி புறப்பட்ட 15 நிமிடங்களில் படகு தண்ணீரில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை 237 பேர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 23 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க கூடும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved