தம்மாம் சர்வதேச விமான நிலையமும் குறிவைக்கப்பட்டதாக தகவல்
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதிக்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், தம்மாமில் ((Dammam)) உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையமும் குறிவைக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுற்றுத்தல் தலைநகர் ரியாத்தை கடந்து பிற நகரங்களுக்கும் விரிவடைந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்திய வடகொரியா
வட கொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலை நோக்கி பல ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா தனது சொந்தத் தயாரிப்பான அதீத வேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த சில நாட்களிலேயே வடகொரியா இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.
பியோங்யாங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று 900 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகப் பயணித்ததாக கூறிய தென் கொரியா, பியோங்யாங்கின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதல் செயலை வன்மையாக கண்டித்தது.
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான 7 நிபந்தனைகள்
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக விதிக்கப்பட்ட 7 நிபந்தனைகளுக்கு அமெரிக்காவின் பதில் போதுமானதல்ல எனக்கூறி ஈரான் அதனை நிராகரித்ததுள்ளது.
ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை நிறுத்துவது, முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவிப்பது, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவது உள்ளிட்ட 7 நிபந்தனைகளில் அமெரிக்கா சிலவற்றை ஏற்றுக்கொண்ட போதிலும், முக்கிய கோரிக்கைகள் பலவற்றில் இன்னும் தெளிவற்ற தன்மையே நீடிப்பதாக கூறி அதனை நிராகரித்துள்ளது.