Also Watch
Read this
By: Manigandan Raja

20 வயது இரட்டை சகோதரிகளுக்கு கடுமையான தண்டனை
ஈரானில் 20 வயதான இரட்டை சகோதரிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரையும் கை, கால் எலும்புகளை உடைத்து சிறையில் சித்ரவதை செய்துள்ளனர்.
டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழப்பு
மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் உயிரிழந்தனர். குர்திஷ் நகரமான சனந்தாஜ் போக்குவரத்து காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி, திடீரென கார்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

லாரியின் பிரேக் பழுதானதே இந்த விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் விபத்து
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறி, வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும், 3 பேர் ஆபத்தான நிலையிலும், 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved