Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கானல் அறிவிப்பு
வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் 300 பேர் மாயமாகியுள்ளதை நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கானல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாக கூறியவர், மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
அல்ஜீரியாவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ
வடக்கு அல்ஜீரியாவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில்,50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக அந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெஜாயா(( Bejaia )), ஜிஜெல் ((Jijel ))மற்றும் திசி உசு ((Tizi Ouzou ))நகரங்களுக்கு அருகே ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, நாட்டின் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. கடுமையான வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதால், பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved