news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்
tv

Also Watch

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்

உண்மையான எதிரி அமெரிக்கா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கமேனி கடிதம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்லாத்தின் உண்மையான எதிரி அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் என்பதை உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் துக்கி ((Dukki))மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் சகோதரர்கள் மூவர் உயிரிழந்தனர்.

விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த இவர்களின் பிக்அப் வாகனத்தின் மீது ரிமோட் கண்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உறவினர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆட்களை சேர்க்க பயங்கரவாதிகள் முயற்சி

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீரில் ஆட்களை சேர்க்க ஐ.எஸ்.ஐ. உதவியுடன் புதிய இணைய வழிகளை பயன்படுத்துவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபாச இணைய தளங்கள், end to end encrypted தளங்கள் மற்றும் டோர் போன்ற இணைய அமைப்புகள் மூலம் இளைஞர்களை தொடர்புகொண்டு ஆட்களை சேர்க்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக வலைதளங்கள் மற்றும் இணைய நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved