news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடல்
tv

Also Watch

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடல்

கைது செய்ய வேண்டும்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இனப்படுகொலையின் சிற்பி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இனப்படுகொலையின் சிற்பி என நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மீண்டும் சாடியுள்ளார். அவர், ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி எனவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு சமூக ஊடகங்களில் வீடியோ மூலம் பதிலடி கொடுத்த நெதன்யாகு, மம்தானி ஹமாஸ் பயங்கரவாத அரக்கர்களின் ஆதரவாளர் என சாடியிருந்தார். மேலும், ஐநா சபைக்கு வந்து மம்தானியை பற்றிய உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்போவதாக கூறியுள்ளார்.

பள்ளியில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர்

துருக்கியில் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணீசா மாகாணத்தில் கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு சென்ற மாணவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் 11 மாணவர்கள் காயமடைந்த நிலையில், தகவலறிந்து பெரும் கூட்டம் கூடிவிட்டது. உடனே வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவசரகால எண்ணுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைவாக சென்று 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

2026-ஆம் ஆண்டின் சிறந்த பறவைப் புகைப்படக் கலைஞர்

ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்தில் ஒரு கேனட் ((gannet)) பறவை கடலின் மேற்பரப்பைத் துளைத்துக்கொண்டு மீனை பிடிப்பதற்காக நீரினுள் சென்றதை பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஹென்லி ஸ்பியர்ஸ் படம்பிடித்தன் மூலம் 2026-ஆம் ஆண்டின் சிறந்த பறவைப் புகைப்படக் கலைஞர் என்ற பட்டத்தைப் அவர் பெற்றார்.

ஹென்லி ஸ்பியர்ஸ் பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related Link
ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?

ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஷஃபாலி வர்மா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved