Also Watch
Read this
By: Manigandan Raja

விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 300 விமானங்கள் ரத்து
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காட்டாவ் எரிமலை திடீரென வெடித்து சிதறியதால், வானத்தில் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் படலமும் கரும்புகையும் சூழ்ந்துள்ளன.
இதன் காரணமாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எரிமலை சாம்பல் பரவுவதை தவிர்க்க பள்ளிகள் மூடப்பட்டு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்றபோது பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது
தீவு நாடான கேப் வெர்டேவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். பகொ தீவின் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் ஆம்னி பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 32 பேர் சுற்றுலா சென்றனர்.

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் போதைப்பொருள் வழக்கில் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் சாரா கலிபா உட்பட 28 பேர் போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சாரா கலிபா உள்பட 12 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved