Also Watch
Read this
By: Manigandan Raja

கூட்டறிக்கை வெளியிட இரு நாடுகளும் திட்டம் என தகவல்
ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என ஈரான் தெரிவித்துள்ளது. தற்போது இரு தரப்பும் சேர்ந்து இறுதி கூட்டறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஓமனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
போரில் சுமார் 200 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்
மேற்காசிய போர் தொடங்கிய பிறகு இதுவரை 200-க்கும் மேற்பட்ட எதிரி நாட்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. போரில் தனது வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை சேதமடையாமல் இருந்ததாகவும் IRGC அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆளில்லா விமான பாகங்களின் சிதைவுகளும் கிடைத்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved