Also Watch
Read this
By: Manigandan Raja

விசாரணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் முடிவு
ஃபிளை துபாய் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என ஐக்கிய அரபு அமீரகம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், விமானத்தின் காக்பிட்டிற்குள் இருந்த அவசர கால கோடரியால் விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு, இச்சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என விசாரிக்க ஒரு சிறப்பு அரசு தரப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
பிரேசிலில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
பிரேஸிலில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், தற்போதைய அதிபரான லூலா டாசில்வா மற்றும் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகன் செனட்டர் ஃபிளாவியோ போல்சனாரோ ஆகிய இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவில் நீப்பர் ஆற்றின் குறுக்கே உள்ள 6 சாலை பாலங்களில் 3 பாலங்கள், கடந்த 2 நாள்களாக நடத்தப்பட்ட ரஷிய தாக்குதல்களால் முழுமையாகவும், பகுதியாகவும் மூடப்பட்டுள்ளன.

வடக்கு பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாலம் சேதமடைந்ததால் தலைநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved