Also Watch
Read this
By: Manigandan Raja

ஆஸ்லோ நகரில் திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்
மறைந்த நார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச்சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தலைநகர் ஆஸ்லோ நகரம் முழுவதும் 21 குண்டுகள் முழங்க மன்னர் ஹரால்டின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு மாளிகையில் இருந்து தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் ஆஸ்லோ நகரின் தெருக்களில் திரண்டு மன்னரின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கனடாவில் பஞ்சாபி பாடகர் கார் மீது துப்பாக்கிச் சூடா?
கனடாவில் பஞ்சாபி பாடகர் அம்மி விர்க்கின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது தந்தை குல்ஜித் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 5-ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் இசைக்கச்சேரி நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றபோது, அம்மி விர்க் கார் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், அவரது கார் மீது 7 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved